பூரி புசுபுசுவென உப்பி, நீண்ட நேரம் அமுங்காமல் இருக்க மாவு பிசையும் முறையில் சில எளிய மாற்றங்களை செய்தாலே போதுமானது. மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு ரவை மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால், பூரி நல்ல நிறத்துடனும் மொறுமொறுப்பாகவும் வரும். மாவை மிகவும் மென்மையாக இல்லாமல் ஓரளவு கெட்டியாக பிசைந்து, எண்ணெய் நன்கு சூடானதும் பொரித்தெடுத்தால் பூரி உப்பி வரும்.