திருச்செந்தூரில் திடீரென 100 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்புள்ள கடல் திடீரென சுமார் 100 அடி வரை உள்வாங்கியது. கோயில் முன்புள்ள நாழிக்கிணறு பகுதியிலிருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாங்கியதால், பாசி படிந்த பாறைகள் அதிகளவில் வெளியே தெரிந்தன. இந்த விநோத நிகழ்வைக் கண்டு வியப்படைந்த பக்தர்கள், வெளியே தெரிந்த பாறைகள் மீது நின்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததுடன், பாறைகளின் அருகே அமர்ந்து ஆர்வத்துடன் நீராடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕