"எனது மகள் பற்றி பரவி வரும் வதந்திகள் உண்மையல்ல”.. நடிகர் சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜின் திருமண வாழ்க்கை உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் குறித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், இதற்கு சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என் மகள் திவ்யா குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. அந்த வதந்திகளில் எதுவும் உண்மையல்ல, என் மகள் கடின உழைப்பாளி, கண்ணியமானவர் மற்றும் திறமையால் சுயமாக முன்னேறிய பெண்மணி. என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமையடைகிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி