அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தலில் விஜய்தான் வெற்றிபெறுவார் என கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. ஓடும் ரயிலில் சுமார் 100 பயணிகளிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக சமயம் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நோட்டாவுக்கு 6, நாதகவுக்கு 10, திமுகவுக்கு 18, அதிமுகவுக்கு 19 பேர் ஆதரவு கொடுத்துள்ளனர். அதே நேரம் விஜய்க்கு 62 பேர் ஆதரவு கொடுத்துள்ளனர். இது வெறும் 100 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு தான். தேர்தலில் கோடிக்கணக்கான பேர் வாக்களிப்பதால் மாற்றம் இருக்கலாம்.