தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்.19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திமுக கூட்டணியில் இணைந்தார். திமுக - தேமுதிக கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனும், எ.வ.வேலுவும் இணைந்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா சீட் மற்றும் தேமுதிக விரும்பிய தொகுதிகள் எனும் உறுதிமொழியின் அடிப்படையில் இந்த கூட்டணியை சபரீசன் இறுதி செய்ததாக கூறப்படுகிறது.
நன்றி: NewsTamilTV24x7