கன்னியாகுமரியில் இன்று (பிப்.25) நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்தார். பிரதமரின் வருகையால் அவர்களது கூட்டணி கட்சிகளே அச்சத்தில் இருப்பதாகவும், எத்தனை முறை வந்தாலும் வரும் தேர்தலில் NDA கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.