திருநெல்வேலி மாநகர உதவி காவல் ஆணையர் செந்தில் குமாரின் தலைமையில் கடந்த 7ஆம் தேதி பெண் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு காவலரை வாகனத்தை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, செந்தில் குமார் 'புஷ்பா 2' படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது மாநகர பொறுப்பு காவல் ஆணையர் மூர்த்தி வயர்லஸ் மைக்கில் அவரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார். இதனையடுத்து 15 நிமிடம் கழித்து லைனில் வந்த செந்தில் குமாரை அனைத்து காவலர்கள் கேட்கும்படி பொறுப்பு காவல் ஆணையர் மூர்த்தி வசைபாடியுள்ளார்.