வெற்றி என்பது போதை போன்றது - ஜெமிமா ரோட்ரிக்ஸ்

கடந்த 2025-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற வரலாற்று வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு மேலும் சிறப்பாக செயல்பட புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில், "வெற்றி என்பது ஒரு போதை போன்றது, ஒருமுறை உலகக் கோப்பையை வென்றுவிட்டால் மீண்டும் அதை வெல்ல வேண்டும் என்ற வெறி இயல்பாகவே வந்துவிடும்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி