தமிழக அரசியல் வரலாற்றில் அதிக முறை சட்டமன்றத் தேர்தல்களில் வென்று, அதிக தடவைகள் ஆட்சி அமைத்த பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையே (அதிமுக) சாரும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளின் தலைமையில் இக்கட்சி மொத்தம் 7 முறை தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 6 முறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.