ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கியது

லாஸ் ஏஞ்சல்சில் 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இந்திய நேரப்படி, இன்று காலை 5.30 மணியளவில் தொடங்கியது. ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் 13 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக புரூட்டலிஸ்ட் என்ற ஆங்கில திரைப்படம் 11 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. இந்தியா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த 'அனுஜா' என்ற குறும்படம் சிறந்த குறும்படம் என்ற பிரிவில் தேர்வாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி