சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணியை உறுதி செய்து வருகிறது. இதில், ஓபிஎஸ் இதுவரை தான் இணையவுள்ள கூட்டணி கட்சியை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து இன்று (பிப்.14) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, “NDA கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணிக்குள் மேலும் புதிய கட்சிகள் வரவும் வாய்ப்புள்ளது. ஜெயலலிதா ஆட்சி அமைய ஓபிஎஸ் தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.