ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, நாதக வேட்பாளர்களுக்கு அடுத்ததாக 2,973 வாக்குகளை பெற்று நோட்டா 3வது இடத்தை பிடித்துள்ளது. இடைத்தேர்தலில் மொத்தம் 46 பேர் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளர் 64 ஆயிரம் வாக்குகளும், நாதக வேட்பாளர் 14 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளனர். மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 3, 4, 6 என சொற்ப வாக்குகளை மட்டும் வாங்கியுள்ளனர். இதனால், 44 வேட்பாளர்களை நோட்டா வீழ்த்தியுள்ளது.