தவெக உடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு, ‘அரசியலிலும் பங்கு, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு’ என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் இதுவரை கூட்டணிக்கு யாரும் வரவில்லை. இதுகுறித்து நேற்று (பிப்.18) செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “தேசிய கட்சியும், மாநில கட்சியும் தவெக கூட்டணிக்கு வருகிறது” என கூறியுள்ளார்.
நன்றி: polimer