'சமூக நீதித்துறை' என்ற பெயரை மாற்ற வேண்டும்.. திருமாவளவன்

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றியிருப்பது தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 'ஆதிதிராவிடர்' என்ற பெயர் வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் தத்துவப் பின்னணி கொண்டது என்பதால், அத்துறைக்கு மீண்டும் "ஆதிதிராவிடர் நலத்துறை" என்றே பெயர் மாற்ற வேண்டும் என அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி