பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்புகளில் அதிக விஷமுள்ள பாம்பு ஆஸ்திரேலியாவில் வாழும் மேற்கு தைபன் ஆகும். இவ்வகை பாம்பு தனது உணரும் திறன் வாயிலாக சூடான ரத்தம் கொண்ட இரைகளை காத்திருந்து வேட்டையாடும் தன்மை கொண்டதாகும். கடந்த 1989ம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவில் முதலில் இவ்வகை பாம்புகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வகை பாம்பு இனங்கள் ஆஸ்திரேலியாவில் மிகக்குறைந்த அளவு என்றாலும், விஷ அச்சுறுத்தலில் பிரபலமானது ஆகும்.