சுவாமி விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர், தனது செய்தியை சிஷ்யன் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வார் என்பதில் உறுதியாக இருந்தார். 1886இல் ராமகிருஷ்ணரின் உடல்நிலை மோசமாகத் தொடங்கியது. அவருக்கு தொண்டை புற்றுநோய் இருந்தது. கடைசி நேரத்தில் தன் சீடர்கள் அனைவரையும் அழைத்து விவேகானந்தர்தான் தனது வாரிசு என்று அவர் அறிவித்தார். இதற்குப் பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் 16இல் ராமகிருஷ்ணர் மகாசமாதி அடைந்தார்.