தவெக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தூத்துக்குடி தொகுதி எது எனத் தெரியாமல், திமுக வெற்றிபெற்ற திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட புன்னைக்காயல் பகுதியில் திறந்த காரில் நின்றபடி தனக்கு அதிக வாக்குகள் அளித்து ஜெயிக்க வைத்ததற்கு நன்றி எனப் பேசியுள்ளார். மக்கள் குறைகளைக் கேட்காமல் தொகுதி மாறி நன்றி தெரிவித்த அமைச்சரின் இந்த வீடியோவை அதிமுக நிர்வாகி சமூக வலைதளத்தில் பகிர, நெட்டிசன்கள் பலவாறாகக் கலாய்த்து வருகின்றனர்.
நன்றி: பாலிமர்