'டார்ச் லைட் சின்னம்' எங்கள் அடையாளம்: கமல்ஹாசன்

மதவாத சக்திகள் தமிழ்நாட்டை கைப்பற்ற சூழ்ச்சி செய்யும் சூழலில், கூட்டணியின் வெற்றி முதன்மையானது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 'பேட்டரி டார்ச்' சின்னத்துடன் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுபூர்வமானது என்றும், அது வெறும் சின்னமல்ல, தங்கள் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டு மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்படும் சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது தியாகம் அல்ல, கடமை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி