2025 பொங்கல் அன்று வெளியாகி, நடப்பு ஆண்டின் முதல் வெற்றி படமாக அமைந்த 'மதகஜராஜா' படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் மீண்டும் நடிக்கவுள்ளார். அத்துடன், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.