திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொன்று புதைத்த காதலன்

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் அருகே திருமணத்திற்கு வற்புறுத்தி வந்த காதலியை, காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால், கொலை செய்து புதைத்துள்ளார். இந்த கொலை குறித்து போலீசார் கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது காதலன் கைது செய்யப்பட்டார். காதலியை கொன்ற இடத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் காதலன் வேலை செய்தபடி நோட்டமிட்டு வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி