தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில், 8 வருடங்களாக காதலித்த பெண், பெற்றோர் பேச்சைக் கேட்டு காதலனுடன் பேச மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காதலன் பாண்ட்லா மகேஷ், காதலியின் வீடு புகுந்து சுத்தியலால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர், மகேஷை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இளைஞரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: Bigtv