தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 12) பதவியேற்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், "2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில், நிச்சயமாக தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும். தாமரை மலர்ந்தே தீரும். இனி வரும் தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் வெற்றிப் பெற வாய்ப்பு இருக்கிறது" என்றார்.