“லாரிதான் எங்களை காப்பாற்றியது”.. கேரள நிலச்சரிவில் சிக்கி தப்பிய தமிழர்கள்

கேரளம்: வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய பால்ராஜ் - கூடம்மாள் தம்பதியினர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தாங்கள் சந்தித்த திகில்  தருணங்கள் பற்றி அவர்கள் கூறியதாவது, "ஓடவே முடியவில்லை. திரும்பிப் பார்த்தபோது மண் சரிவு எங்கள் அருகே வந்துவிட்டது. அந்த நேரத்தில் சாலையில் நின்றிருந்த லாரிதான் எங்களுக்கு அரணாக இருந்து உயிரைக் காப்பாற்றியது" என்று அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். வயநாட்டின் மேம்பாடியில் தோட்ட தொழிலாளர்களாக இருவரும் பணியாற்றிவருகின்றனர். 

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி