நாம் வாழும் உலகம் 40,075 கிமீ தூரம் கொண்டது ஆகும். உலகில் உள்ள 7 கண்டங்கள் தனித்தனியே பிரிந்து இருப்பதால், உலகில் நடைதூரம் என்பது 22,000 கிமீ ஆகும். அதாவது, உலகின் மொத்த தூரத்தில் இது பாதிக்கும் அதிகம் ஆகும். அதன்படி ரஷியாவின் மகதனில் தொடங்கும் நடைப்பயணத்தை நாம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் நிறைவு செய்யலாம். இதுவே உலகில் அதிகம் நடந்து செல்லும் தூரம் ஆகும். சுமார் 17 நாடுகள், 6 வித்தியாசமான நேர மண்டலங்களை கடந்து நாம் இலக்கை தொடர்ச்சியாக நடந்தால் 187 நாட்களில் அடையலாம்.