தவெக அரசு இன்று தொடங்கவிருந்த 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் அறிவிக்கப்படாத நிலையில், சமீபத்திய வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசு மீது கடும் விமர்சனங்களை வைப்பது முதல்வர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இத்திட்டம் சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.