திமுக கூட்டணியில் இருந்து விலகிய விடுதலை சிறுத்தைகள் கட்சி

திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்ற விசிக, தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. ஆனால், தற்போது தவெகவுடன் இணைந்து நேரடியாக அமைச்சரவையில் பங்கேற்க விசிக முடிவு செய்துள்ளதால், திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது. இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி