இயக்குநர் சுதீப்தோ சென்னின் 'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு சமூக அச்சுறுத்தல் காரணமாகத் தடை விதிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். வரும் 27-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல் பாகம் விவாதங்களைக் கிளப்பிய சூழலில், இரண்டாம் பாகத்திற்கான இந்த எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.