தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய அவர், "உழைப்புக்கு உதாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது வெற்றி நமதே என்பதை உறுதி செய்யக் கூடிய மாநாடு" என கூறியுள்ளார்.