மதுரை: தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அறநிலைத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (டிச.5) தொடங்கியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை தொடங்கியது. அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விசாரணையானது தொடங்கியுள்ளது.
நன்றி: NewsTamilTV24x7