மனைவியின் 100 சவரன் நகையை கொள்ளையடித்த கணவர்

சென்னை அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது வீட்டில், இரண்டு தினங்களுக்கு முன் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், உரிமையாளர் ஜனார்த்தனன் தனது நண்பரை வைத்து மனைவியின் நகையை திட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. நகையை அடமானம் வைத்து ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 40 சவரன் இழந்துவிட்டதால், தனது மனைவியிடம் தப்பிக்க நகையை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி