பனிக்கரடியிடம் இருந்து போராடி மனைவியை மீட்ட கணவர்

கனடா: காணாமல்போன வளர்ப்பு நாய்களை தேடி பெண் ஒருவர் சென்றார். அப்போது, அவ்வழியாக சென்ற பனிக்கரடி ஒன்று திடீரென அப்பெண் மீது பாய்ந்தது. இதனைப் பார்த்த அவரது கணவர், பனிக்கரடியிடம் போராடி, மனைவியின் உயிரை காப்பாற்றினார். மனைவியை தாக்கிய கரடியின் மீது கணவர் பாய்ந்ததில் அவரது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் துப்பாக்கியால் சுட்டு ஒலி எழுப்பினர். இதனால், அந்த கரடி அங்கிருந்து பயந்து ஓடியது.

தொடர்புடைய செய்தி