ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகள் மூலம் அடக்கப் பார்க்கும் தவெக அரசின் போக்கைக் 'தி இந்து' நாளேட்டின் தலையங்கம் கடுமையாகச் சாடியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நம் முதல்வருக்கு புரியும்படி கூறவேண்டும் என்றால் இந்திய அளவில் புகழ்பெற்ற பத்திரிகையின் நடுப்பக்கம் நங்குநங்கென்று குட்டியுள்ளது என கூறியுள்ளார். மேலும், கைது நடவடிக்கைகளால் ஆட்சிக் குறைகளை மறைக்க நினைத்தால் மக்களே சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.