2 நாள் சுற்றுப்பயணமாக தஞ்சை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 16) அங்கு நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "தஞ்சையில் பல்கலைக்கழகம் அமைக்க மசோதா நிறைவேற்றி 40 நாட்கள் ஆகியும், இன்னும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் மாறுவார் என நினைத்தோம்; ஆனால் அவர் மாறவே இல்லை" என விமர்சித்துள்ளார்.