600 பள்ளிகளை நிரந்தரமாக மூடிய அரசு!

அருணாச்சலப்பிரதேச மாநிலம் முழுவதும் செயல்படாத அல்லது பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை கொண்ட சுமார் 600 பள்ளிகளை அரசு மூடியுள்ளது. மாணவர் சேர்க்கை அடியோடு குறைந்து முற்றிலும் செயல்படாத பள்ளிகள் மூடப்பட்டன, மிக குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகள் வேறு பள்ளியுடன் இணைக்கப்பட்டன. இதுபோன்று மேலும் சில பள்ளிகளை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் 2,800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இதில், 7,600-க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி