"கல்விக்கு ஒதுக்கும் நிதி செலவு அல்ல முதலீடு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"கல்வியும், மருத்துவமும் திராவிட மாடலின் இரு கண்கள்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்கால சமுதாயத்துக்கான முதலீடு. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து இருப்பது, அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது” என பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி