விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஓ பட்டர்பிளை' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை (பிப்.19) வெளியாகிறது. நிவேதிதா சதீஷ், நாசர் மற்றும் லட்சுமிப்ரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.