தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓயும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை; மாநிலம் வன்முறைக் காடாக மாறிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பெருமளவு கடன் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் இது என்பதால், மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்துத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.