மகனை கொலை செய்து கைதான தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வேளாண் அலுவலரான ராமசாமி (74). இவர், மதுபோதையில் தொடர்ந்து தொல்லை செய்து வந்த தனது மகன் சுப்ரமணியன் (34) என்பவரை கடந்த 1ஆம் தேதி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தார். தொடர்ந்து கைதான ராமசாமி உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக்., 04) உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி