தென்னை மரத்தை கட்டிப்பிடித்து கதறிய விவசாயி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆக்கிரமிப்பு என கூறி தென்னை மரங்களை பிடுங்கியதால், விவசாயி கதறி அழுதுள்ளார். மலையாண்டிபட்டினம் என்னும் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, ஆக்கிரமிப்பு எனக் கூறி தென்னை மரங்களை அதிகாரிகள் வேரோடு பிடுங்க முயன்றனர். அவர்களுடன் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தென்னை மரத்தை கட்டிப்பிடித்து, “40 வருஷமா புள்ள மாறி வளத்தனே” என கூறி கதறி அழுதார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி