கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகப் புகழ்பெற்ற 'ஆற்றுக்கால் பொங்கல்' திருவிழா இன்று (மார்ச்.3) கோலாகலமாக நடைபெற்றது. 'பெண்களின் சபரிமலை' என்று அழைக்கப்படும் இக்கோயிலில், லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் சாலையோரங்களில் மண்பானைகளில் பொங்கலிட்டுத் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பங்கேற்கும் இந்த வழிபாட்டையொட்டி, திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நன்றி:ANI