அகமதாபாத் விமான விபத்து தன்னை பெரிதும் பாதித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "பயணிகள், விமான ஊழியர்களின் குடும்பத்தினர் வலி கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவர்களுடன் இருக்கிறது. அரசு உடனடியாக மீட்பு மற்றும் உதவிகளை வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.