பொங்கலன்று நடக்கும் தேர்வுகளை மாற்ற வேண்டும்

"CA Foundation தேர்வு தேதிகளை மாற்ற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் திருவிழாவான பொங்கல் (ஜன. 14) அன்றும், உழவர் திருநாள் (ஜன.16.) அன்றும் Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் நாளில் தேர்வுகளை அறிவித்து தமிழ்பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும்" என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி