தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என தொடர்ந்து தமிழக அரசு மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் முதல் தேர்வை எழுதிய மாணவிகள், வினாத் தாள் ஈஸியாக இருந்ததாக கூறுகின்றனர். மேலும், இதேபோல் இனிவரும் தேர்வுகளும் ஈஸியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
நன்றி: சன் நியூஸ்