தவெக தலைவர் விஜய், வேலூர் அகரம்சேரியில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.இந்நிலையில், இது மக்கள் சந்திப்பு அல்ல, நிர்வாகிகள் சந்திப்பு என கட்சி அறிவித்துள்ளது. மொத்தம் 4,900 நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். QR Code கொண்ட பாஸ் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே நிகழ்ச்சி வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.