சென்னை தி.நகரில் நேற்று (மார்ச் 26) பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மயிலாப்பூரில் தாமரை நிச்சயம் வெற்றி பெறும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் அறிக்கையை தயாரித்து விட்டோம். அதை மாநில தலைவரின் ஒப்புதலுக்கு வழங்கியிருக்கிறோம். அவர் ஒப்புதல் வழங்கியதும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். பழனிசாமி குளிர்ச்சியான தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார். நாங்கள் வளர்ச்சியான தேர்தல் அறிக்கையை கொடுப்போம்” என்றார்.