தந்தை, தாய், தம்பியை கொடூரமாக கொன்ற மூத்த மகன்

மத்தியப் பிரதேசம் மாநிலம் பெதுல் மாவட்டத்தின் சவாங்கா கிராமத்தில், தீபக் துர்வே (25) என்ற இளைஞர் தனது தந்தை ராஜு (55), தாய் கமல்தி (40), தம்பி திலீப் (20) ஆகியோரை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், மேலும் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி