தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ததால், சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது. இந்நிலையில், வருகிற 27ஆம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.