நாடாளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இடைத்தேர்தலுக்கு முன் மின் கட்டண உயர்வு பற்றி செய்தி வெளியாகியிருந்த நிலையில், அதற்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்திருந்தது. தற்போது, மின் கட்டண உயர்வை அறிவித்து மக்களுக்கு தேர்தல் முடிந்த கையோடு பெரிய பரிசை கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.