138 பட்டங்கள் பெற்று அசத்திய 'டிகிரி மேன்'

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 55 வயதான முன்னாள் ராணுவ வீரர் தஷ்ரத் சிங் ஷெகாவத், 138 பட்டங்களை பெற்று 'டிகிரி மேன்' என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். சட்டம், அரசியல், தத்துவம், பொருளாதாரம் மற்றும் வாஸ்து என பல துறைகளில் கல்வி பயின்றுள்ள இவர், 3 முனைவர் பட்டங்கள், 46 முதுகலை பட்டங்கள் உட்பட பல சான்றிதழ்களை பெற்று 11 உலக சாதனைகளை படைத்துள்ளார். கல்வியின் மீதுள்ள அலாதி பற்றால் இவர் தொடர்ந்து பல பட்டங்களை குவித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி