ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக் கொன்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாலிபான் ஆட்சி மரண தண்டனை நிறைவேற்றியது. கிழக்கு மாகாணத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 80,000 பேர் முன்னிலையில் தண்டனை நடைபெற்றது. அதிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் துப்பாக்கியால் குற்றவாளியை சுட்டு தண்டனையை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.